உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கமுதி குருநாதசுவாமி கோயில் பால்குடம் ஊர்வலம்

கமுதி குருநாதசுவாமி கோயில் பால்குடம் ஊர்வலம்

கமுதி: கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தில் குருநாதசுவாமி கோயில் 46வது ஆண்டு குருபூஜை விழா, விநாயகர்,பெரியநாச்சியம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பொங்கல் விழா நடந்தது. இதனை முன்னிட்டு பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். குருநாதசுவாமி கோயில் முன்பு பொங்கல் வைத்தனர்.பின்பு விநாயகர் கோயிலில் பக்தர்கள் முக்கிய வீதிகளில் பால்குடம், அழகுவேல் குத்தி ஊர்வலமாக சென்றனர். முக்கிய நிகழ்ச்சியாக சேத்தாண்டி வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.விநாயகர்,அம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. கிராமமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !