சித்திரை அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி கடலில் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு
ADDED :1518 days ago
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள். சித்திரை அமாவாசை யொட்டி தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். பின் பக்தர்கள், கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் செய்து விட்டு அக்னி தீர்த்த கடலில் சிவசிவ என கோஷமிட்டபடி புனித நீராடினார்கள். இதனையடுத்து கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினார்கள். பின் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் காத்திருந்து பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.