உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 2 ஆண்டுகளுக்குப் பின் திருப்புத்துார் அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு

2 ஆண்டுகளுக்குப் பின் திருப்புத்துார் அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு

திருப்புத்துார்: திருப்புத்துாரில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் குளம் கரை கூத்த அய்யனார் கோயில் புரவி எடுப்பு நடந்தது.

திருப்புத்துார்,தம்பிபட்டி, புதுப்பட்டி கிராமங்களுக்குப் பாத்தியப்பட்ட குளங்கரை காத்த கூத்த அய்யனார் கோயில் திருப்புத்துார் பெரிய கண்மாயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் புரவி எடுப்பை முன்னிட்டு ஏப்.,15 ல் பிடி மண் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து ஏப்.22ல் கோயில் குளத்திற்கு முன்பாக ‛ சேங்கை’ எனப்படும் சிவகங்கை ஊரணியை மூன்று கிராமத்தினரும் பங்கேற்று வெட்டினர். நேற்று முன்தினம் மாலை கிராமத்தினர் சீதளிமேல்கரை ராமர் மடத்திலிருந்து புரவி துாக்க புதுப்பட்டி சென்றனர். அங்கு வேளார் பொட்டலில் புரவிகளுக்கு வஸ்திரம் அணிவிக்கப்பட்டது. சாமி அழைப்பும் நடந்தது. இரவு 8:15 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் முன்னிலையில் புரவிகளுகஅகு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் புதுப்பட்டியில் இருந்து கிராமத்தினர் புரவிகளை ஊர்வலமாக எடுத்து வந்து சீதளி கீழ்கரை புரவி பொட்டலில் நிறுத்தினர். நேற்று மதியம் 2.00 மணிக்கு அமைச்சர் பெரியகருப்பன் புரவிகளை தரிசனம் செய்தார். நேற்று மாலை 5:00 மணிக்கு கிராமத்தினர் கூடிய பின்னர் புரவிகளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. பின்னர் மாலை 6.15 மணிக்கு புரவி பொட்டலிலிருந்து புரவி எடுப்பு துவங்கி முக்கிய தெருக்களின் வழியாக ஊர்வலமாக சென்றனர். பெரியகண்மாய் கரையில் அமைந்துள்ள அய்யானர் கோயிலில் புரவிகள் சேர்க்கப்பட்டது. புரவிகளுக்கும் 1மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்து புரவி எடுப்பு நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !