பழநியில் அமாவாசை முன்னிட்டு குவிந்த பக்தர்கள் : காத்திருந்து தரிசனம்
ADDED :1354 days ago
பழநி: பழநியில் அமாவாசை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.
பழநியில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்தது. வெளி மாவட்ட, மாநிலத்திலிருந்து வந்த வண்ணம் உள்ளனர். பழநி மலைக்கோயில், அடிவாரம், சன்னதி வீதி, கிரி வீதி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் இருந்தது. கோயில் பொது தரிசன கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் நிரம்பியது. வின்ச், ரோப் கார் வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மலைக்குச் சென்றனர். பழநி சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோயில்கள், பெரியநாயகி அம்மன் கோவில், கணக்கன்பட்டி பழனிச்சாமி மூட்டை சுவாமிகள் ஜீவசமாதி, மானூர் சுவாமிகள் ஜீவசமாதி, கரடிகூட்டம், பாலாறு-பொருந்தலாறு அணை ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் தரிசனம் செய்தனர்.