தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் 125வது ஆண்டு தொடக்க விழா
ADDED :1257 days ago
தஞ்சாவூர் : தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில், ரெங்கநாயகி கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை நடத்தும் நமது நாட்டு சுதந்திரத்தின் 75ம் ஆண்டு விழா மற்றும் ராமகிருஷ்ண மிஷனின் 125வது ஆண்டு தொடக்க விழா நாளை மே 1ம் தேதி, காலை 9.00 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில் இளைஞர்களை உடலாலும் மனதாலும் பலப்படுத்துவதை சிறபிக்கும் விதமாக முதலாவது மாபெரும் நடசாரி சிலம்பப்போட்டி நடைபெறுகிறது. விழாவில் தமிழ்ப்பல்கலைக்கழகம் துணைவேந்தர் வி.திருவள்ளுவன், தஞ்சாவூர் மேயர் இராமநாதன் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர். விழாவில் தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்தர் வாழ்த்துரை வழங்குகிறார். அனைவரும் பங்கேற்கலாம்.