உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நிறைவு

கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நிறைவு

கோவை; கோவையின் காக்கும் தெய்வமான தண்டுமாரியம்மன் கோவில் வசந்த விழாவில் அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கோவை தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து பூச்சாட்டு, அக்னிசாட்டு, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. சித்திரை திருவிழாவின் நிறைவாக கோவை தண்டு மாரியம்மன் கோவிலில் நடந்த வசந்த விழாவில் அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !