பழநியில் கார்த்திகை வழிபாடு: தங்க மயில் வாகனத்தில் சுவாமி உலா
ADDED :1511 days ago
பழநி: பழநியில் சித்திரை மாத கார்த்திகை நட்சத்திர நாளான இன்று தங்க மயில் வாகனம், தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. பழநி மலைக்கோயிலில் சித்திரை மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. தங்கமயில் வாகனத்தில் சின்னகுமாரசுவாமி புறப்பாடு நடைபெற்றது. அதன்பின் தங்கரத புறப்பாடு நடைபெற்றது. உள்ளூர், வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர் விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது.