உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டிபட்டி, ஆர்.எஸ்.மங்கலத்தில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை

ஆண்டிபட்டி, ஆர்.எஸ்.மங்கலத்தில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை

ஆர்.எஸ்.மங்கலம்: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஆர்.எஸ். மங்கலத்தில், இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். முன்னதாக, ஆர்.எஸ்.மங்கலம் ஜூம்மா பள்ளியிலிருந்து, காலை 7:00 மணிக்கு ஜமாத்தார்கள் ஊர்வலமாகச் சென்று, பெரிய கண்மாய் பாலம் அருகே உள்ள கொத்துவா மைதானத்தில் காலை 7:35 மணிக்கு ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். சிறப்பு தொழுகையை தொடர்ந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி வைகை அணை ரோட்டில் உள்ள மதினா பள்ளிவாசலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை பள்ளி இமாம் முன்னிலையில் நடந்தது. ஜமாத் அனைவரும் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர். அனைத்து உலக மக்களுக்கும் நலம் வேண்டி கடவுளிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளிவாசல் பொருளாளர் மைதீன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !