ஆழ்வார் மோட்சத்தில் காட்சியளித்த அபய பிரதான ரங்கநாதர் சுவாமி
ADDED :16 hours ago
கரூர்: வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, கரூர் அபய பிரதான ரங்க-நாதர் சுவாமி கோவிலில் பகல் பத்து உற்சவம் முடிந்தது. கடந்த, 30ல் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்-தது. தொடர்ந்து ராப்பத்து உற்சவம் தொடங்கியது. நேற்று, 10ம் நாளில் ராப்பத்து உற்சவத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், ரங்கநாதர் சுவாமி ஆழ்வார் மோட்சத்தில் பக்தர்க-ளுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு மேளதாளங்கள் முழங்க அபய பிரதான ரங்க-நாதர் சுவாமி கோவில் உலா நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிர-சாதம் வழங்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசியின் ராப்பத்து நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இன்று ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.