உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கவுமாரியம்மன் கோயிலில் உருண்டு கொடுக்கும் நேர்த்திக் கடன்: அதிகாலை மட்டுமே அனுமதி

கவுமாரியம்மன் கோயிலில் உருண்டு கொடுக்கும் நேர்த்திக் கடன்: அதிகாலை மட்டுமே அனுமதி

கம்பம்: கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு உருண்டு கொடுக்கும் நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் செய்திட வேண்டும் என்று கிராம கமிட்டி கேட்டுக் கொண்டுள்ளது.

கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு கொண்டாடப்படுகிறது. ஏப். 7 ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினர் மண்டகப்படி நடத்தி வருகின்றனர். விதவிதமான அலங்காரங்களில் அம்மன் வீதி உலா வருகிறார். நேற்று முதல் பெரும்பாலான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், ஆயிரம் கண்பானை எடுத்தல், உருண்டு கொடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். தொடர்ந்து  வரும் சில நாட்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் திரளாக வருவார்கள். அத்துடன் இன்று இரவு கோயில் முன்பாக பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கிடையே கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதால் உருண்டு கொடுக்கும் நேர்த்தி கடன் செலுத்துபவர்கள் மட்டும் அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் செலுத்திட செயல் அலுவலர் மற்றும் கிராம கமிட்டி கேட்டுக் கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !