2 ஆண்டுகளுக்குப் பிறகு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட ரம்ஜான் பண்டிகை
காரைக்குடி: காரைக்குடி பகுதியில், கொரோனா ஊரடங்கால், 2 ஆண்டுகளுக்கு பிறகு ரம்ஜான் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கூட்டம் கூடுவதற்கு தடை இருந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடந்த ரம்ஜான் பண்டிகையை, இஸ்லாமியர்கள் சிறப்பாக கொண்டாடினர்.
காரைக்குடி ஈதுகா மைதானத்தில், காரைக்குடி ஐக்கிய முஸ்லிம் ஜமாத் கமிட்டி சார்பிலும், காட்டுத்தலைவாசல் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பிலும், பாண்டியன் திரையரங்க திடலில் ஏகத்துவ முஸ்லீம் ஜமாத் சார்பிலும், ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். புதுவயல், கானாடுகாத்தான், கோட்டையூர், பகுதிகளிலும் சிறப்பு தொழுகை நடந்தது. மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.