கூவம் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம்
கூவம், :கடம்பத்துார் ஒன்றியம், கூவம் திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நாளை துவங்குகிறது.நாளை, காலை 6:30 மணி முதல், 7:30 மணிக்கு கொடியேற்றத்தை தொடர்ந்து சோமாஸ்கந்தர் சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 10ம் தேதி, காலை 8:00 மணிக்கு நடைபெறும். அன்று மாலை 3:00 மணிக்கு பன்னிரு திருமுறைகளுடன் நால்வர் வீதியுலா நடைபெறும்.பின், மறுநாள் காலை 8:0 மணிக்கு சந்திரசேகர் பவழக்கால் சப்பரமும், மாலை 4:00 மணிக்கு பிச்சாடனர் உற்சவமும் நடைபெறும்.அதை தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு சுவாமி, அமபாள் திருக்கல்யாண உற்சவமும் இரவு சோமாஸ்கந்தர் குதிரை வாகனத்தில் வீதியுலாவும் நடைபெறும்.வரும் 16ம் தேதி சித்திரை பிரம்மோற்சவம் நிறைவு பெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.