சூலூர் சிவன் கோவில் திருப்பணி வரும், மே 6 ம்தேதி துவக்கம்
ADDED :1264 days ago
சூலூர்: சூலூர் சிவன் கோவில் திருப்பணி, மே 6 ம்தேதி துவங்குகிறது. சூலூர் ரயில்வே பீடர் ரோட்டில், சின்னக்குளக்கரை அருகே, 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ தையல் நாயகி சமேத ஸ்ரீ வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகளுக்கு மேலாகிறது. கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, திருப்பணி செய்ய அரசு நிதி ஒதுக்கியது. இரு மாதங்களுக்கு முன், பாலாலய பூஜை நடத்தப்பட்டு, தினசரி பூஜைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், வரும், மே 6 ந்தேதி காலை, 6:30 மணிக்கு, திருப்பணிகள் துவக்க விழா நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.