திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் நாளை பிரம்மோற்சவ கொடியேற்றம்
திருவள்ளூர், :திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், 10 நாள் சித்திரை பிரம்மோற்சவம், நாளை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா, நாளை, காலை 4:45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதை தொடர்ந்து, பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக உற்சவர் வீரராகவர் தங்க சப்பரத்தில், காலை 6:00 மணிக்கு வீதியுலா செல்கிறார். மாலை, சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.வரும், 15ம் தேதி வரை, 10 நாட்கள் நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவில், வீரராகவர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் கவுரவ ஏஜன்ட் சம்பத் செய்து வருகிறார்.3 ஆண்டுக்கு பின் தேரோட்டம்திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், 2019ம் ஆண்டு, உற்சவர் வீரராகவர் பெரிய தேரில் எழுந்தருளி உலா வந்தார். 2020 மற்றும் 2021ம் ஆண்டு, கொரோனா பெருந்தொற்று காரணமாக, தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. தற்போது, கொரோனா தொற்று குறைந்த நிலையில், மூன்று ஆண்டுக்கு பின், தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக, பெரிய தேர், சீரமைக்கப்பட்டு, வர்ணம் பூசி, தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.