கூவம் திரிபுராந்தக சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்
 கூவம், கூவம் திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவிலில், கொடியேற்றத்துடன் சித்திரை பிரம்மோற்சவம் நேற்று துவங்கியது.கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்த, கூவம் கிராமத்தில் ஹிந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவில். இங்கு இந்தாண்டு சித்தரை பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று, காலை 7:15 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.அதை தொடர்ந்து சோமாஸ்கந்தர் சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், வரும் 10ம் தேதி, காலை 8:00 மணிக்கு நடைபெறும்.பின் 8ம் தேதி, மாலை 4:00 மணிக்கு, பிச்சாடனார் உற்சவமும், இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாணமும் நடைபெறும்.வரும் 16ம் தேதி, சித்திரை பிரம்மோற்சவம்நிறைவு பெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.