உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் பிரமோத்ஸவம் துவக்கம் : மே 14. ல் சித்திரைத் தேரோட்டம்

திருக்கோஷ்டியூர் பிரமோத்ஸவம் துவக்கம் : மே 14. ல் சித்திரைத் தேரோட்டம்

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோத்ஸவம் துவங்கியது. மே 14ல் சித்திரைத் தேரோட்டம் நடைபெறும்.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பிரமோத்ஸவம் துவக்க நாளை முன்னி்ட்டு, நேற்று காலை 8:00 மணி அளவில் மூலவர் சன்னதியில் உத்ஸவ பெருமாள்,ஸ்ரீதேவி,பூதேவியருடன் சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து புறப்பாடாகி கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் அஷ்டதிக் பாலர்கள் அழைப்பு நடந்தது. சக்கரத்தாழ்வாரும் கொடிபடமும் திருவீதி வலம் வந்தனர். பின்னர் கொடிக்கு சிறப்பு பூஜைகளை பட்டாச்சார்யர்கள் நிறைவேற்றி கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்திற்கும், சுவாமிக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. அரண்மனை மரியாதை வழங்கப்பட்ட பின்னர் சுவாமி பள்ளியறை எழுந்தருளினார். மாலையில் காப்புக்கட்டி உத்ஸவம் துவங்கியது. இரவு 8:00 மணி அளவில் தங்கப்பல்லக்கில் பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியருடன் திருவீதி வலம் வந்தார். பத்தாம் திருநாளான மே 14 ல் தேரோட்டம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !