/
கோயில்கள் செய்திகள் / பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழாவில் பிரம்மாண்ட சிலைகள் ஊர்வலம்
பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழாவில் பிரம்மாண்ட சிலைகள் ஊர்வலம்
ADDED :1292 days ago
சிவகாசி: சிவகாசி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் 3 ம் நாள் திருவிழாவில் பிரம்மாண்ட சாமி சிலைகள் ஊர்வலமாக வந்தது.
சிவகாசி ஸ்ரீ பத்திரகாளியம்மமன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா மே 3 ல் துவங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் , வாகனம், காமதேனு வாகனம், கைலாச பர்வத வாகனம் , வேதாள வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 3 ம் நாள் திருவிழாவான நேற்று இரவு காளீஸ்வரி கல்லுாரி, காளீஸ்வரி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் டெக்னாலஜி சார்பில் முக்கிய நிகழ்ச்சியாக பிரம்மாண்ட சாமி சிலைகள் வாகனத்தில் ஊர்வலமாக வந்தது. சிவன், அசுரரை வதம் செய்தல், 5 தலை நாகம் படம் எடுத்தல் உள்ளிட்டவைகள் தத்ரூபமாக சிலைகளின் வடிவில் காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.