வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், சித்திரை பெருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள, ஹிந்து சமய அறநிலையத்துறையின், வேதகிரீஸ்வரர் கோவில், பக்தர்களிடம் பிரசித்திபெற்றது. இங்கு ஆண்டுதோறும், 10 நாட்கள் நடக்கும் சித்திரை பெருவிழா, நேற்று துவங்கியது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, விக்னேஸ்வரர் உற்சவம், மிருத்சங்கரணம் வாஸ் துசாந்தி என நடந்தன. நேற்று அதிகாலை, வேதகிரீஸ்வரர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, சிறப்பு யாக சாலை ஹோமம் ந டந்தது. 5:30 ம ணிக்கு,மூலவர் சன்னிதி முன், சித்திரை பெருவிழா கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, பக்தவத்சலேஸ்வரர் கோவில் உற்சவர்கள் சோமாஸ்கந்தர், திரிபுரசுந்தரி, விநாயகர், முருகர் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமியர், காலை 7:15 மணிக்கு, மலைக்குன்று கோவில் அடிவாரம் சென்று, வீதியுலா சென்றனர். இரவு, புண்ணிய கோடி விமான, பஞ்சமூர்த்திகள் உற்சவம் நடந்த து. பக்தர்கள் , சுவாமியரை தரிசித்தனர். நாளை காலை 6:00 மணிக்கு, வெள்ளி அதிகார நந்தி, 63 நாயன்மார்கள் கிரிவலம் செல்கின்றனர். இவ்விழா, 15ம் தேதி வரை, தினமும், காலை, இரவு உற்சவங்களுடன் நடக்கிறது.