முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் மாட்டுவண்டி பந்தயம்
ADDED :1284 days ago
வத்தலக்குண்டு: ஜி. தும்மலப்பட்டி முத்தாலம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வண்டிகள் பங்கேற்றன. பெரிய, நடு, கரிச்சான் மாடு ஆகிய 3 பிரிவுகளில் போட்டி நடந்தது. கணவாய்பட்டி, வத்தலக்குண்டு ரோட்டில் போட்டிகள் நடந்ததால் காலை முதல் 12:00 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பெரிய மாடு பிரிவில் கோம்பை காளிதாஸ், கல்லானை விஸ்வ ரவிச்சந்திரன், தும்மலப்பட்டி வினோத், சின்னமனூர் தங்கம், நடு மாடு பிரிவில் நான்கு பரிசுகளை கம்பத்தைச் சேர்ந்த கண்ணன், பங்களா ஈஸ்வரன், ராசுகுட்டி, மீசைரவி, கரிச்சான் பிரிவில் குச்சனூர் வனராஜா, உத்தமபாளையம் மணி முருகன், கம்பம் குமார், கள்ளந்திரி கண்ணன் ஆகியோர் பெற்றனர். ரொக்கம், கேடயம், பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.