ஐஸ்வர்ய விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா
ADDED :1284 days ago
கோவை: கோல்டுவின்ஸ் அருகே உள்ள ஐஸ்வர்ய விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கோவை கோல்டு வின்ஸ் அருகே உள்ள துரைசாமிநகர், விஜயலட்சுமி அவென்யு, பொதிகை நகர், ராமலட்சுமி நகர் பகுதியில் பொதுவாக அமைந்துள்ள ஐஸ்வர்ய விநாயகர் கோயில் 19ம் ஆண்டு விழா, புவன நாதர், கல்யாண சுப்ரமணியர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கோவிலில் அமைந்துள்ள ஐயப்பன், காலபைரவர், நடராஜர், சிவகாமி மற்றும் முருகர், வள்ளி, தெய்வானை விக்கிரகங்களுக்கு பிரதிஷ்டை, மகாகும்பாபிஷேகம் நடந்தது. காயத்ரிதேவி குருபீடம் ஆகம பாடசாலை தலைமை ஆசிரியர் ஸ்ரீனிவாச சிவாச்சாரியார் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சியும், திருக்கல்யாணமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், நகர பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.