மாரியம்மன் தேர் திருவிழா : கிராமிய நடனங்களுடன் முளைப்பாரி ஊர்வலம்
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் தேர் திருவிழாவில் கிராமிய நடனங்களுடன் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது இதில் நேற்று தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் சார்பில் சித்திரைத் தேர் ஊர்வலம் நடைபெற்றது சிறப்பு விருந்தினராக அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் சமூக தலைவர் ஜான்பாண்டியன் பங்கேற்றார். குன்னூர் சுப்பிரமணியர் கோவிலில் இருந்து தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய நடனங்களுடன், மேள தாளங்கள் முழங்க நடந்த முளைப்பாரி ஊர்வலத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இதில் மதுரை வீரர் வேடமணிந்தவர் குதிரையில் வலம் வந்தார். விநாயகர் கோவில் மண்டபத்தில் அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. கோவை தேவேந்திர குல மடத்தின் சுவாமி ராஜன் தேவேந்தர் பங்கேற்றார்.