ஸ்ரீகாளஹஸ்தி பொன்னாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1265 days ago
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள நான்கில் பகுதியில் உள்ள பொன்னாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று அதிகாலை வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி மற்றும் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசலு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பொன்னாலம்மன் கோயில் விமான கோபுர கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பின்னர் மூலவரான பொன்னால் அம்மன் கலசாபிஷேகத்திலும் எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி கலந்துகொண்டனர் பின்னர் கோயில் பண்டிதர்கள் எம்.எல்.ஏ.வையும் பொன்னாலம்மன் தேவஸ்தான கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோரை வேத ஆசீர்வாதம் செய்ததோடு தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.