லிங்கத்தின் மேல் பெருமாள்!
ADDED :1326 days ago
ஏகாதசி விரதமிருந்து பெருமாளை தரிசிக்க புண்டரீக மகரிஷி திருப்பாற்கடல் கோயிலுக்கு வந்தார். அங்கு மூலவராக சிவலிங்கம் இருக்க திரும்பிப் போனார். வழியில் ஒரு பாலகன் தோன்றி, கோயிலில் பெருமாள்தான் இருக்கிறார் என்று சொல்ல, அவர் மீண்டும் கோயிலுக்கு வர, அங்கே லிங்கத்தின்மீது நின்ற கோலத்தில் பெருமாள் காட்சி தந்த தலம், காவேரிப்பாக்கத்துக்கு அருகில் உள்ள திருப்பாற்கடல்.