உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மரணத்தையே வென்றவர்!

மரணத்தையே வென்றவர்!


காலனை வென்றதால் சிவனுக்கு மிருத்யுஞ்ஜயன் என்ற திருநாமம் உண்டு. மரணத்தை வென்றவர் என்பது இதன் பொருள். மிருத்யு என்றால் மரணம். மார்க்கண்டேயர் சிவபெருமானைச் சரணடைந்து காலனை வென்ற வரலாறு இந்தப் பெயரை நினைவூட்டுகிறது. காலதேவனான எமனின் கடமையைச் செய்ய சிவனே தடையாக இருந்ததாக நமக்குத் தோன்றும். ஆனால்,இந்த விளையாடலில் சிவன் எமனுக்கும் அருள்புரியவே செய்தார். இடதுபுறம் பார்வதியோடு அர்த்தநாரீஸ்வரராக இருக்கும் சிவன், இடக்காலால் தான் எமனை உதைத்தார். இடப்பாகம் அருளே வடிவான அம்பாளின் பாகம் என்பதால், எமனின் உள்ளத்தில் தர்ம சிந்தனையே தழைத்தது. இதையடுத்து அவன் தர்மப் படி நடந்து கொண்டான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !