மந்திரம் படிக்க நல்லநாள்!
ADDED :1328 days ago
ஓம் கணேசாய நம, ஓம் சரவணபவ, ஓம் சிவாயநம போன்ற மந்திரங்களை தினமும் ஜெபித்தால் மனம் எளிதில் ஒருமுகப்படும். கடவுளிடம் வைத்த கோரிக்கை விரைவாக நடந்தேறும். துõய சிந்தனை பிறக்கும். இதுபோன்ற மந்திரங்களை ஜெபிக்கத் தொடங்குவதற்கு குறிப்பிட்ட சில நாட்கள் விசேஷமானவை என்கிறது சாஸ்திரம். சூரிய, சந்திர கிரகண நாட்களில், கிரகண வேளையில் ஜெபிக்கத் தொடங்குவது சிறப்பு. இது தவிர தமிழ் மாதப்பிறப்பு, தை முதல் ஆனி வரை வளர்பிறை பிரதமை முதல் பவுர்ணமி வரையான 15 நாட்களும் உகந்தவை.