/
கோயில்கள் செய்திகள் / ஒத்தக்கடை யோக நரசிங்கப் பெருமாள் கோயிலில் வரும் 15ல் நரசிம்ம ஜெயந்தி வழிபாடு
ஒத்தக்கடை யோக நரசிங்கப் பெருமாள் கோயிலில் வரும் 15ல் நரசிம்ம ஜெயந்தி வழிபாடு
ADDED :1280 days ago
மதுரை: மதுரை, யானை மலை ஒத்தக்கடை, யோக நரசிங்கப் பெருமாள் கோயிலில், வரும் 15ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நரசிம்ம ஜெயந்தி வழிபாடு சிறப்பாக நடைபெறவிருக்கிறது. விழாவை முன்னிட்டு அன்று காலை 9.00 மணிக்கு புன்னியாக வாஸநம், காலை 9.30 மணிக்கு திருமஞ்சனம் ஆரம்பமாகிறது. தொடர்ந்து மதியம்1.00 மணிக்கு திருவாராதனம் சாற்று முறை கோஷக்டி, மதியம் 1.30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.