காரமடையில் ராமபிரானுக்கு சீதாபிராட்டிக்கும் திருமண வைபவம்
ADDED :1639 days ago
மேட்டுப்பாளையம்: காரமடை ஜெயமாருதி சேவா சங்கத்தின் சார்பில், ராமநவமி உற்சவம், ஆஞ்சநேயருக்கு, 1008 வடைகள் சாத்தும் படியும், சீதாராம திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காரமடை சொர்க்கவாசல் வீதியில், மகா கணபதி ஹோமம், ஸ்ரீ ராம, ஆஞ்சநேய நாம ஹோமங்கள், உலக நலன் வேண்டி மகா சுதர்சன ஹோமத்துடன் விழா துவங்கியது. ஸ்தலத்தார் சுதர்சன பட்டர், நல்லான் சக்கரவர்த்தி ஆகியோர் தலைமையில், விஷ்வக்சேனர் ஆராதனம், சீதாராம லட்சுமண ஆஞ்சநேய விக்ரஹ ஆராதனம், ராமநவமி லட்சார்ச்சனை ஆகியவை நடந்தது. பின்பு ராமபிரானுக்கு, சீதாபிராட்டி அலங்காரம் செய்த மண்டபத்தில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.