வாமனரின் பெற்றோர்
ADDED :1263 days ago
காஸ்யபர், அதிதி தம்பதிக்கு இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் குழந்தைகளாக பிறந்தனர். இத்தம்பதி மகாவிஷ்ணுவை மகனாக அடைய விரும்பி தவம் இருந்தனர். அதை ஏற்ற மகாவிஷ்ணு துவாதசி திதியும், திருவோண நட்சத்திரமும் இணையும் நாளில் வாமன மூர்த்தியாக அவதரித்தார். வாமனரைக் கண்ட அதிதி, ‘சிரவண மங்களா’ (ஓண நாளில் மங்களமாக வந்தவனே) என்று சொல்லி மகிழ்ந்தாள். இந்திரனின் தாய் அதிதியின் வயிற்றில் பிறந்ததால், வாமனருக்கு ‘உபேந்திரன்’ என்றும் பெயருண்டு. இதற்கு ‘இந்திரனுக்கு பின்வந்தவன்’ அதாவது ‘இந்திரனின் தம்பி’ என்பது பொருள்.