வடமதுரை திருவிழாவில் இன்று திருக்கல்யாணம்
ADDED :4787 days ago
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் இன்று மாலை திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவில்தினமும் இரவு சுவாமி புறப்பாடு நடந்து வருகிறது. வடமதுரை சி.ஏ.வி., காட்டன் மில்ஸ் நிர்வாக இயக்குனர் இ.என்.பழனிச்சாமியின் ஆறாம் நாள் மண்டகப்படியில் யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. வேலாயுதன் குழுவினரின் சென்டை மேளக் கச்சேரியும், வாணவேடிக்கையும் நடந்தது. திருக்கல்யாணம் தாயார் சன்னதியில் இன்று மாலை நடக்கிறது. திருத்தேரோட்டம் ஆக. 2லும், ஆக. 4ல் வசந்தம் முத்துபல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. செயல் அலுவலர் வேலுச்சாமி மற்றும் பொதுமக்கள் ஏற்பாட்டினை செய்து வருகின்றனர்.