/
கோயில்கள் செய்திகள் / திருவையாறில் சப்தஸ்தான விழா : கண்ணாடி பல்லக்கில் ஐயாறப்பர் ஏழூர் புறப்பட்டார்
திருவையாறில் சப்தஸ்தான விழா : கண்ணாடி பல்லக்கில் ஐயாறப்பர் ஏழூர் புறப்பட்டார்
ADDED :1253 days ago
தஞ்சாவூர்,- திருவையாறில் ஐயாறப்பர் கோவிலில் சப்தஸ்தான விழா நடைபெற்றது. இதில் ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கில் ஏழூர் புறப்பட்டார்.
முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான விழா இன்று (16ம் தேதி) காலை ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் கோவிலில் இருந்து புறப்பட்டு, கோபுர தரிசனம் நடைபெற்றது. இதை தொடர்ந்து பல்லக்கு ஏழூர்் புறப்பட்டு சென்றது. தொடர்ந்து இரவு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி ஆகிய 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் காவிரி ஆற்றில் சங்கமித்தது. பின்னர் தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாணவேடிக்கை நடைபெற்றது. நாளை 17ம் தேதி தில்லைஸ்தானம் பல்லக்குடன் 6 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூபோடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.