உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகாசி மாதபிறப்பு : பழநியில் பக்தர்கள் கூட்டம் காத்திருந்து தரிசனம்

வைகாசி மாதபிறப்பு : பழநியில் பக்தர்கள் கூட்டம் காத்திருந்து தரிசனம்

பழநி: பழநியில் வைகாசி மாத பிறப்பு, பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

பழநியில் வைகாசி மாத பிறப்பு, பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்தது. அக்னி நட்சத்திரத்தை விழாவில் வெளியூர், உள்ளூர் பக்தர்கள் மலைகோயில் கிரிவலம் வந்த வண்ணம் உள்ளனர். வெளி மாவட்ட, மாநிலத்திலிருந்து வருகை புரிந்தனர். பழநி மலைக்கோயில், அடிவாரம், சன்னதி வீதி, கிரி வீதி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் இருந்தது. கோயில் பொது தரிசன கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் நிரம்பியது. வின்ச், ரோப் கார் வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மலைக்குச் சென்றனர். 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அருள்ஜோதி வீதி, குளத்து ரோடு, பூங்கா ரோடு, முக்கிய வீதிகளில் வெளியூர் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தி இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வைகாசி மாதபிறப்பு:  பழநி, முருகன் மலைக்கோயிலில் வைகாசி தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. பழநி, முருகன் மலைக்கோயிலில் வைகாசி தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு ஆனந்த விநாயகருக்கு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. மலைக்கோயிலில் கும்பகலசங்கள் வைத்து கணபதி ஹோமம் நடைபெற்றது. ஆனந்த விநாயகருக்கு கலச நீர் அபிஷேகம், செய்யப்பட்டது. சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், லட்சுமி நாரயண பெருமாள் கோயிலில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !