உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம்
ADDED :1299 days ago
வேடசந்தூர்: வேடசந்தூர் மாரியம்மன் கோவிலில் உலக நன்மையை வேண்டி, சிறப்பு யாகம் நடந்தது. வைகாசி முதல் நாளாக நேற்று காலை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, துர்கா ஹோமத்துடன் விழா துவங்கியது. உலக நன்மைக்காகவும், கொரோனா எனும் கொடிய நோய் மக்களை தாக்காமல் இருப்பதற்கும், மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும், பொதுமக்கள் மனஅமைதி பெற வேண்டி சிறப்பு யாகம் நடந்தது. யாக பூஜைகளை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.