ஊட்டி காந்தள் ஸ்ரீதியான மஹா முனீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :1250 days ago
ஊட்டி: ஊட்டி காந்தள் ஸ்ரீதியான மஹா முனீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடந்தது.
ஊட்டி அருகே காந்தளில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதியான மஹா முனீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாஷேகத்தையொட்டி, நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, முதல் காலயாக பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. நேற்று, காலை, 5:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை பூர்ணாகுதி மஹா தீபாராதனை நிகழ்ச்சியை தொடர்ந்து, 6:30 மணிக்கு காசி விஸ்வநாதர் கோவில் குருக்கள் சரவணன் தலைமையில், மஹா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஸ்ரீதியான மஹா முனீஸ்வரர் ஆலய விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.