அவிநாசி சித்திரை தேர்த்திருவிழா : நடராஜர் மஹா தரிசன காட்சி
                              ADDED :1261 days ago 
                            
                          
                           அவிநாசி  : அவிநாசி கோவில் சித்திரை தேர்த்திருவிழாவில், நடராஜர், சிவகாமியம்மன் மஹா தரிசன காட்சி நடந்தது. 
அவிநாசியிலுள்ள ஸ்ரீகருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா நடந்து வருகிறது. தேரோட்டம் முடிந்த நிலையில், நேற்று 13ம் நாள் உற்சவமாக நடராஜர், சிவகாமியம்மன் மஹா தரிசன காட்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.