உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா

கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெண்ணைவலம் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா நடந்தது. விழாகடந்த 10ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து 4 நாட்கள் சிறப்பு பூஜை மற்றும் சுவாமி வீதியுலா நடந்தது. 6ம் நாள் காப்பு கட்டுதலும், நேற்று முன்தினம் சுவாமிக்கு கண் திறப்பு விழா நடந்தது. தொடர்ந்து நேற்று அதிகாலை 6:00 மணிக்கு கூத்தாண்டவர் திருத்தேர் வடம் பிடித்தல் நட ந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !