வர்ணமுத்து மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவ விழா
ADDED :1254 days ago
வானுார்: வானுார் அடுத்த பாப்பாஞ்சாவடியில் வர்ணமுத்து மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவ விழா நடந்தது. விழா கடந்த 9ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது. மறுநாள் கொடியேற்றமும், காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ச்சியாக 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை தினமும் இரவு சுவாமி வீதியுலா நடந்தது.நேற்று மதியம் 12:00 மணிக்கு கூழ் படைத்தலும், மாலை 3:00 மணிக்கு செடல் உற்சவமும் நடந்தது. பக்தர்கள் அலகு குத்தியும், வேன், கார் உள்ளிட்ட வாகனங்கள் இழுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.