கொங்கபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா
ADDED :1313 days ago
அவலுார்பேட்டை: வளத்தி அடுத்த கொங்கபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா நடந்தது. கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 12 ம் தேதி திருமஞ்சனத்துடன் துவங்கியது. தினமும் இரவு சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய விழாவான நேற்று திருத்தேர் உற்சவம் நடந்தது. அதனையொட்டி அலங்கரிக்கப்பட்ட சுவாமியை தேர்தல் எழுந்தருளச் செய்து, பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர். அமைச்சர் மஸ்தான் தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், சுப்ரமணியன், மாவட்ட கவுன்சிலர் செல்வி, ஊராட்சி தலைவர் ராஜா மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.