சென்னை நங்கநல்லூர் பக்த ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :1248 days ago
சென்னை : நங்கநல்லூர் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் கோயிலில் இன்று (20ம் தேதி) கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இத்திருக்கோயிலில் பாலாலயம் கடந்த மாதம் 25ம் தேதி நடைபெற்றது. திருக்குடமுழுக்கை முன்னிட்டு 16ம் தேதி யாக சாலை வளர்க்கப்பட்டு, லட்சுமி, நரசிம்ம சுதர்ஷன ஹோமங்கள், விசேஷ சந்தி, இரண்டாம் கால பூஜை, ஹோமங்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து 17 ம் தேதி அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்வு நடைபெற்றது. 19 ம் தேதி புண்யாஹவாசனம், காலசந்தி திருவாராதனம், அதிவாசத்ரய ஹோமம், வேதவிண்ணப்பம், சாற்றுமறை நிகழ்வு நடந்தது. விழாவில் இன்று சிவாச்சாரியார்கள் கலசதிற்கு புனித நீர் ஊற்ற காலை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஆன்மிக முக்கிய பிரமுகர்கள் , பக்தர்கள் பங்கேற்றனர்.