செகந்திராபாத் விநாயகர் கோயிலில் விஜயேந்திரர் வழிபாடு
ADDED :1248 days ago
ஐதராபாத் : தெலுங்கானாவில் யாத்திரை மேற்கொண்டுள்ள காஞ்சி விஜயேந்திரர், செகந்திராபாத் விநாயகர் கோயிலில் வழிபாடு செய்தார்.
காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் தெலுங்கானா மாநில யாத்திரை மேற்கொண்டுள்ளார். இன்று காலை செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலுக்கு வருகை தந்தார். அவரை தெலுங்கானா அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் பூஜாரிகள் வரவேற்று சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்தனர். முன்னதாக நேற்று (19ம் தேதி) ஐதராபாதின் புறநகர் பகுதியான ஸ்கந்தகிரி கோயிலில் சிவாச்சாரியார்கள் சபையில் தலைமைதாங்கி சிறப்புரை வழங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.