சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி 2ம் நாளாக தரிசனம்
ADDED :1242 days ago
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று இரண்டாவது நாளாக கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக, சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு ஆணை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் பக்தர்கள் கனகசபை மீது ஏறி நடராஜரை வழிபட்டனர். 2ம் நாளான நேற்றும் ஏராளமான போலீசார் கோவிலில் குவிக்கப் பட்டு இருந்தனர். பக்தர்கள் வரிசையாக சென்று கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர்.