கள்ளக்குறிச்சி கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம்
ADDED :1302 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது. கோடைக்காலத்தையொட்டி, கள்ளக்குறிச்சி பூமிநிலா புண்டரீகவள்ளி சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் கடந்த 19ம் தேதி வசந்த உற்சவம் தொடங்கியது. உற்சவத்தின் இரண்டாம்நாளான நேற்று அதிகாலை சுப்ரபாத சேவை, கோபூஜையை தொடர்ந்து பெருமாள், தாயார் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது.மாலை, உற்சவர் சர்வ அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பின் மண்டகபடி பூஜைகளை நடத்தினர். பூஜைகளை தேசிகபட்டர் செய்து வைத்தார். இன்றுடன் வசந்த உற்சவம் பூர்த்தியடைகிறது.