முனியாண்டி கோயிலில் 500 ஆடு வெட்டி கறி விருந்து
ADDED :1253 days ago
அவனியாபுரம்: அவனியாபுரம் வெள்ளக்கல் கலுங்கடி முனியாண்டி சுவாமி கோயிலில் 35வது ஆண்டுவிழாவை முன்னிட்டு 500 ஆட்டு கிடாய்கள் வெட்டி பக்தர்களுக்கு கறி விருந்து வழங்கும் விழா நடந்தது. இக்கோயிலில் பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் ஆடு வெட்டுகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இவ்விழா நேற்று நடந்தது. நேற்று முன்தினம் இரவு பக்தர்கள் ஆட்டு கிடாய்களுடன் பொங்கல் பானை ஊர்வலம் நடைபெற்றது. இரவு 12:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் முடிந்து கிடாய்கள் வெட்டப்பட்டது. பக்தர்களுக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது. திருப்பரங்குன்றம், பெருங்குடி, சிந்தாமணி, காரியாபட்டி உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளிலிருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.