வைகாசி பொங்கல் விழா
ADDED :1255 days ago
தேனி : தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளிம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழா மே 17 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில் அம்மன் மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவில் மின் அலங்காரத்தில் முக்கிய வீதிகளில் ஊர்வலம் நடந்தது. இன்று அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருள்கிறார். முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது. மே 22ல் கழுவேற்றம், மே 23ல் பூ பல்லாக்கு நடக்கிறது. மே 26ல் முளைப்பாரி ஊர்வலம் நடந்து, அன்று மாலை கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.