பழநியில் அக்னி நட்சத்திர விழா நிறைவு : பக்தர்கள் கிரிவலம்
ADDED :1266 days ago
பழநி: பழநியில் அக்னி நட்சத்திர விழா நிறைவு பெற்றது. பக்தர்கள் இறுதியில் வலம் வர குவிந்தனர்.
பழநியில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் கடைசி ஏழு நாட்களும் வைகாசி மாதத்தில் முதல் 7 நாட்களிலும் அக்னி நட்சத்திர விழா நடைபெறும். இந்த ஆண்டு மே. 8 முதல் நேற்று வரை இவ்விழா கடைபிடிக்கபட்டது. சித்திரை கழுவு எனும் இவ்விழாவில் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுவது வழக்கம். இந்த நாட்களில் மலைக்கோயில் கிரிவலம் வரும் 14 நாட்களில் இறுதி நாளான நேற்று அதிகளவில் பக்தர்கள் கிரி வீதியில் குவிந்தனர். கடம்ப மலர்களை தலையில் சூடி, மலர்கள் கையில் ஏந்தி கிரிவலம் சுற்றி வந்தனர். நேற்று காலை பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து முத்துக்குமாரசாமி அடிவாரம் திருவீதியில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார்.