சக்தி விநாயகர் கோவில் ஆண்டுவிழா
ADDED :1316 days ago
பல்லடம்: பல்லடம் அருகே, ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. பல்லடம் அடுத்த, வடுகபாளையம் ஹாஸ்டல் ரோட்டில், ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலின் எட்டாம் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. முன்னதாக, மே 19 அன்று கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. இதையடுத்து, பிள்ளையார்பட்டி, மற்றும் கொடிவேரி சென்று தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, விநாயகருக்கு தீர்த்த அபிஷேகம் நடந்தது. சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, மகா அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்டவை நடந்தன. நேற்று சிறப்பு அலங்காரத்துடன் ஸ்ரீசக்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் கமிட்டி சார்பில், பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.