2,500 ஆண்டுகள் பழமையான ருக்மிணி கோயில்
ADDED :1269 days ago
குஜராத் மாநிலம் துவாரகாவில் இருந்து இரண்டு கி.மீ., தொலைவில் உள்ளது ருக்மிணி கோயில். 2,500 ஆண்டுகள் பழமையான இக்கோயிலின் தற்போதைய கட்டுமானம் 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது.
வெண் மணலில் எழுப்பப்பட்டது போல தோற்றமளிக்கும் கோயிலின் கட்டுமானம் பேலுார், ஹளபேடுவை நினைவுபடுத்துகிறது. உயரத்தில் அமைந்த பிரம்மாண்ட நடைமேடையில் கோயில் உள்ளது. நான்கு கைகளுடன் வெண்கல சிலையாக காட்சி தரும் ருக்மிணி சங்கு, சக்கரம் ஏந்தியிருக்கிறார். இங்கு ஏன் அவர் தனியாக இருக்கிறார் என்பதற்கு ஒரு கதை சொல்கிறார்கள். கோபத்துக்குப் பெயர் பெற்ற துர்வாசருக்கு விருந்தோம்பல் செய்த ருக்மணி, அவருக்கு தண்ணீர் கொடுக்க மறந்ததால் சிலகாலம் கிருஷ்ணரை பிரிய நேர்ந்தது என்கிறார்கள். கிருஷ்ணருக்கும் ருக்மிணிக்கும் ஏகாதசியன்று திருமணம் நடந்ததால் அன்று கோயில் விழாக்கோலம் பூண்டிருக்கும்.