அரிகியம் சக்கரை மாதேஸ்வரர் கோவில் குண்டம் விழா
ADDED :1231 days ago
ஈரோடு : சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூரை அடுத்த அரிகியம் மலை கிராமத்தில் உள்ள ஸ்ரீ சக்கரை மாதேஸ்வரர் கோவில் குண்டம் விழா இன்று நடைபெற்றது. தலைமை பூசாரிகள் குண்டம் இறங்கியதை தொடர்ந்து பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமிகள் என 500க்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கினர். திருவிழாவிற்கு அரிகியம், மாக்கம்பாளையம், கோம்பை தொட்டி, குரும்பூர், ஆகிய மலை கிராமங்களிலிருந்து 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டது.