உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் ஊர்வலத்துடன் துவங்கிய சேவுகப்பெருமாள் கோயில் திருவிழா

விநாயகர் ஊர்வலத்துடன் துவங்கிய சேவுகப்பெருமாள் கோயில் திருவிழா

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி திருவிழா விநாயகர் ஊர்வலத்துடன் துவங்கியது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயிலின் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி கோயிலில் உள்ள விநாயகர் கிராமத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. மே 26 ம் தேதி இரவு 10:00 மணிக்கு மாடுகள் பூட்டிய வெள்ளி சப்பரத்தில் விநாயகர் ஊர்வலமாக கிராமத்திற்கு அழைத்து வரப்பட்டார். வழிநெடுகிலும் மக்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். ஐயனாருக்கு திருவிழா நடத்த கிராமத்தார்கள் சார்பில் விநாயகரிடம் காணிக்கை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து நள்ளிரவு ஒரு மணிக்கு விநாயகர் சந்திவீரன் கூடத்தில் எழுந்தருளினார். அங்கு 10 நாட்கள் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். பத்தாம் நாளான ஜூன் 5ம் தேதி காணிக்கை பணத்துடன் விநாயகர் மீண்டும் கோயிலுக்கு திரும்பிச் செல்வார். அன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !