உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகாசி சிவன் கோவில் வைகாசி பிரமோற்சவ திருவிழா மே 30 ல் துவக்கம்

சிவகாசி சிவன் கோவில் வைகாசி பிரமோற்சவ திருவிழா மே 30 ல் துவக்கம்

சிவகாசி: சிவகாசி சிவன் கோயில் வைகாசி பிரமோற்சவ திருவிழா மே 30 ல் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.

இரு வருடங்களாக கொரோனா தொற்றினால் சிவன் கோயிலில் பெரிய திருவிழா எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில் வைகாசி பிரம்மோற்சவம் திருவிழா மே 30 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் இரவு 8:00 மணிக்கு பூத வாகனம், காமதேனு வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜூன் 7 ல் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !