ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்த அண்ணாமலையார்
ADDED :1561 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை நடைபெற்றது. பூஜை நிறைவாக, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் ரிஷப வாகனத்தில் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று விடுமுறை தினம் என்பதால், சுவாமி தரிசனம் பக்தர்கள் குவிந்தனர். இரண்டாம் பிரகாரத்தில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.